Monday, 14 November 2011

கமாடிட்டி முன்பேர வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்யும் காரணிகள்



காரணிகள்


தங்கம், வெள்ளி,தாமிரம் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றின் மீதான கமாடிட்டி முன்பேர வர்த்தகம் என்பது, சர்வதேச சந்தைகளில் நிலவும், தேவை மற்றும் அளிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சார்ந்து உள்ளது. 


அதேசமயம், வேளாண் விளை பொருள்கள் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகம் என்பது, பெரும்பாலும் உள்நாட்டு சந்தைகளில் நிலவும், தேவை, உற்பத்தி மற்றும் அளிப்பு போன்றவற்றை சார்ந்து உள்ளது. 


நம்நாட்டில், பல்வேறு வேளாண் விளைபொருள்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், போதிய அளவிற்கு விளைச்சல் இன்றி, தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அளிப்பு இல்லாத நிலையில், வேளாண் விளைபொருள்கள் மீது, முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள அரசு தடை விதித்து விடும். 
இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2008ம் ஆண்டில், பல அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால், நாட்டின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. இதனால், கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, ரப்பர், சோயா எண்ணெய் போன்ற வேளாண் விளைபொருள்கள் மீது, முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசு தடை விதித்தது.


 முன்பேர வர்த்தகம், ஊக வணிகம் என்று கருதப்பட்டாலும், இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும் விளைபொருள்களின் விலை, ஒரு சில தினங்களில் பன் மடங்காக அதிகரிக்க வாய்ப்பில்லை. அப்படியே விலை உயரும் பட்சத்தில், முன்பேர வர்த்தக சந்தைகள் அதை உடனடியாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து விடும். ஏனெனில், இதனால் இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, புரோக்கர்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் இது ஸ்தம்பிக்க வைத்து விடும். இதனால், பணப்பட்டுவாடா பிரச்னைகளும் ஏற்படும். எனவே, முன்பேர வர்த்தக சந்தைகளும், இச்சந்தைகளுக்கான கட்டுப்பாட்டு அமைப்பான 'பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷனும்' (எப்.எம்.சி.) இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
 தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விளைபொருள்கள் மீது அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. 


தங்கம்&வெள்ளி 


உலக அரசியல் &பொருளாதார சுழ்நிலை
தேவை மற்றும் அளிப்பு
அமெரிக்க டாலர் மதிப்பு 


உலோகங்கள் :


தேவை மற்றும் அளிப்பு
உற்பத்தி செய்யும் நாடுகளில் ற்படும் இயற்கை சிற்றங்கள்  
உற்பத்தியில் ற்படும் பாதிப்பு
பொருளாதார சுழ்நிலை

No comments:

Post a Comment