முதலீடு
சேமிப்பு என்பது உபரியாக உள்ள பணத்தை சேர்த்துவைப்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் பணத்தை வருமானம் தரக்கூடிய முறையில் மாற்றுவதே முதலீடு ஆகும்.முதலீடு வருமானம் ஈட்டுவதுடன் எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.
முதலீட்டு முறைகள்
முதலீட்டு முறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த முதலீட்டின் முலம் வருவாய் பணவீக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
சேமிப்பு என்பது உபரியாக உள்ள பணத்தை சேர்த்துவைப்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் பணத்தை வருமானம் தரக்கூடிய முறையில் மாற்றுவதே முதலீடு ஆகும்.முதலீடு வருமானம் ஈட்டுவதுடன் எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.
முதலீட்டு முறைகள்
முதலீட்டு முறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த முதலீட்டின் முலம் வருவாய் பணவீக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
- வங்கியில் வைப்பு நிதி (Fixed Deposit)
- நிலம்
- தங்கம்
- பங்குச்சந்தை
- பரஸ்பர நிதி (Mutual Fund)
வங்கியில் முதலீட்டை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிர்ணயிக்கபட்ட வட்டிவிகித்தில் முதலீடு செய்ய முடியும்.வங்கியில் செய்யபடும் முதலீடு பாதுகாப்பானதுடன் நிச்சயமான வருவாய் முதலீடு ஆகும்.வங்கியின் வட்டி நிலவரங்கள் இன்றைய நிலையில் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் மத்திய வங்கி (Reserve Bank of India) வட்டி விகிதத்தை அடிக்கடி மாற்றுவதால் எல்லா வங்கிகளுமே ஒருவித குழப்பத்தில் இருப்பதால் இன்றைய நிலையில் வங்கியின் வட்டி விகிதம் ஒரு நிலை இல்லாத நிலை இல் இருக்கிறது. இன்றைய நிலையில் வங்கி வட்டி விகிதம் 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கிறது.
நிலம்
நிலத்தில் முதலீடு செய்வது அதிகப்படியான வருவாய் தருவதாக இருந்தாலும் நிரந்தரமானதாக கருதமுடியாது. விலை சில சமயங்களில் விண்ணைமுட்டுவதாக இருந்தாலும் நிச்சயமாற்ற முதலீடு ஆகும். நிலத்தில்
முதலீடு செய்ய பெரிய தொகை தேவைப்படும் ஒரு குறைபாடு ஆகும்.
தங்கம்
தங்கம் என்பது இந்தியாவை பொறுத்த வரை அதிக தேவை (Demand) இருக்கும் ஒரு பொருள். இந்தியாவில் இருக்கும் ஒவொருவருக்கும் தம்மிடம் தங்கம் இருந்தால் அது மிகப்பெரிய சேமிப்பு என்று சொல்லும் அளவு மதிப்பான ஒரு பொருள் தங்கம்.
தங்கத்தில் முதலீடு செய்ய தங்கக்கட்டிகளாகவும், Gold Exchange Traded Fund ஆகவும்,முன்பேர வர்த்தக சந்தைலும் ஈடுபடலாம்.தங்கத்தின் விலை உயர செல்லும் வாய்ப்பு உள்ளதால் இது ஒரு சிறந்த முதலீடு ஆகும்.
பங்குச்சந்தை
ஒரு பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை அதில் நிறுவனங்களின் பங்கு மற்றும் தொடர்பான கூறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் வர்த்தகம் செய்யப்படும்;
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது என்பது சந்தையின் போக்கை ஒத்தது.
முதலீடு செய்வது நிச்சயமாற்ற முதலீடு ஆகும்.அதிகப்படியான ரிஸ்க எடுத்தால் வருமானம் எய்தலாம்.
பரஸ்பர நிதி
பரஸ்பர நிதியானது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் வகையான கூட்டு முதலீட்டு திட்டம் ஆகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி அதை பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால பணச்சந்தை ஆவணங்கள் மற்றும் /அல்லது பிற கடனீட்டு ஆவணங்களில் முதலீடு செய்கிறது..இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
பரஸ்பர நிதியில் செயப்படும் முதலீடுயும் சந்தையின் அபாயங்களுக்கு உட்பட்டது. பரஸ்பர நிதி முதலீடுயும் ஒரு நிச்சயமாற்ற முதலீடு ஆகும்.
Great ! Nice explanation with simple sentences
ReplyDeleteThanks for ur visit&comment.Give ur valuable suggestion too.waiting for feedback too.
ReplyDeleteThanks