Saturday, 4 February 2012

பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்: மன்மோகன் சிங்

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதத்துக்குள் இருக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு 2011&12 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 9% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து 13 முறை கடன் வட்டி உயர்த்தப்பட்டதால் பொருளாதார வளர்ச்சி தடைபட்டது. ஐரோப்பிய நிதிநெருக்கடியும் பொருளாதார வளர்ச்சி சரிவதற்கு காரணமாக அமைந்தன. இதையடுத்து, திட்டமிட்டபடி 9% வளர்ச்சியை எட்ட முடியாது என ரிசர்வ் வங்கி கூறியது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், 2008 ல் சர்வதேச நிதிநெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நமது பொருளாதாரம், 2010&11 நிதியாண்டில் 8.4% வளர்ச்சி அடைந்தது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பான வளர்ச்சி ஆகும். எனினும், பணவீக்கம் காரணமாக வட்டியை உயர்த்தியது நடப்பு நிதியாண்டில் எதிர்பார்த்த 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியாது. எனினும், வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றார்.



No comments:

Post a Comment