நாட்டின், அன்னிய நேரடி முதலீடு, 1.76
பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆக சரிந்து வந்த
அன்னிய நேரடி முதலீடு ஜூலை மாதத்தில் 1.76 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது,இது 2011 ஜூலை மாதத்தில் வந்த முதலீட்டை விட 60% அதிகம் ஆகும்.
சேவை, மருந்து, அடிப்படை கட்டமைப்பு மற்றும் மின்சார துறைகளில் அதிகளவில் அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டிற்க்கு அன்னிய முதலீடு மொரீஷியஸ்,நெதர்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளது.
கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு, 3,650 கோடி டாலர் என்ற அளவிலும், 2010-11ம் நிதியாண்டில், 2,583 கோடி டாலர் என்ற அளவிலும் இருந்தது.
ரிசர்வ் வங்கின் கணக்கெடுப்பின் படி 2012 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான அன்னிய நேரடி முதலீடு குறைந்து உள்ளதாக கூறியுள்ளது.இந்த கால கட்டத்தில் 6.18
பில்லியன் டாலராகவும் ,இது 2011 ஏப்ரல் முதல் ஜூலை கால கட்டத்தில் 14.6 பில்லியன் டாலராக ஆக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது
No comments:
Post a Comment