Tuesday, 25 September 2012

இந்தியாவின் வளர்ச்சி: 'எஸ் அண்டு பி' மதிப்பீடு

உலகின் முன்னணி தர குறியீட்டு நிறுவனமான, 'எஸ் அண்டு பி' இந்தியாவின் வளர்ச்சி இந்த  நிதியாண்டில் 5.5 சதவீதமாக குறையும் என மறுமதிப்பீடு செய்துள்ளது. இந்த  நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி,முந்தைய மதிப்பிட்டில் 6.3 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. உலக பொருளாதார மந்தநிலை,பருவ மழை குறைவு,மற்றும்  ள்ட்டமைப்பு  வசதி  ஆகியவை குறைந்த   மறுமதிப்பீட்டிற்கான காரணமாக குறிப்பிடபட்டு உள்ளது.



ஆசிய பசிபிக் நாடுகளின் வளர்ச்சியும் குறைந்த அளவிலேயே இருக்கும் என, 'எஸ் அண்டு பி' நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் பொருளாதார வளர்ச்சி, (7.5 சதவீதம்),ஜப்பான் (2 சதவீதம்), தென் கொரியா (2.5சதவீதம்), சிங்கப்பூர் (2.1 சதவீதம்), தைவான் (1.9 சதவீதம்) ஆகிய நாடுகளின் வளர்ச்சியும் குறையும் என, மதிப்பிட்டுள்ளது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் காணப்படும் பிரச்னைகள், அமெரிக்க பொருளாதாரத்தின் சுணக்க நிலை ஆகியவற்றின் தாக்கம், பல நாடுகளின் வளர்ச்சியை பாதிக்கும் என, தெரியவந்துள்ளது. பருவ மழை குறைவால், இந்தியாவின் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  


 இதைப் போல் மற்றொரு  நிதி நிறுவனமான  மோர்கன் ஸ்டான்லி  இந்தியாவின் வளர்ச்சி 5.1% சதவீதமாக குறையும் என இந்த மாத தொடக்கத்தில் மறுமதிப்பீடு செய்துள்ளது.

No comments:

Post a Comment