Friday, 26 October 2012

முதலீடு - பணவீக்கம் மற்றும் வட்டிவிகிதம்

முதலீடு

சேமிப்பு என்பது உபரியாக உள்ள பணத்தை சேர்த்துவைப்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் பணத்தை வருமானம் தரக்கூடிய  முறையில் மாற்றுவதே முதலீடு ஆகும்.முதலீடு வருமானம் ஈட்டுவதுடன் எதிர்காலத்தில் லாபம் தரக்கூடியவகையிலும் இருக்க வேண்டும்.

பணவீக்கம்  மற்றும் வட்டிவிகிதம் இவ்விரண்டும் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டியவையாகும்,ஏனனில்  முதலீட்டின்  வருவாயில் அதிக விளைவை ஏற்படுத்தும் காரணிகள் இவையே ஆகும்.



 பணவீக்கம் 

 பணவீக்கம்  என்பது பணத்தின் மதிப்பு குறைவதும்,பொருளின் விலை உயர்ந்து கொண்டு செல்லும் நிலையே ஆகும்.அதிகப்படியான பணம்  மிக குறைந்த பொருளை துரத்துவதாகும்.


சிறந்த முதலீடு 

சிறந்த முதலீடு என்பது  பணவீக்கத்தை காட்டிலும் அதிக வருவாய் தரகூடியதாக இருக்க வேண்டும்.முதலீட்டாளரின் குறிக்கோள்  தன் செய்யும் முதலீட்டை பணவீக்கத்தின்  பிடியில் இருந்து  பாதுகாத்து அதிக வருவாய் தரக்கூடிய  முதலீட்டை தேர்ந்து எடுப்பதாகும்.

பல வளர்ந்த நாடுகளில் வங்கிகளின் சேமிப்பு கணக்கு வட்டிவிகிதம்  பணவீக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்க முயற்சி செய்துவருகின்றன. 

பணவீக்கம் அதிகமாக உள்ள காலகட்டங்களில் அரசு மற்றும் நிறுவனங்களின் கடன் பத்திரகள் அதிக லாபத்தை ஈட்டும்,அச்சசமயங்களில் முதலீட்டாளர் கடன் பத்திரகளில் முதலீடு சிறந்ததாகும்.

பணவீக்கம் மற்றும் வட்டிவிகிதத்தின் தொடர்பு 

 பணப்புழக்கத்தின் தன்னிச்சையான  விளைவே பொருளாதாரத்தில் பணவீக்கம் ஆகும்.மத்திய அரசுகள்  பணப்புழக்கத்தை கட்டுபடுத்த வட்டிவிகிதத்தை ஓர் கருவியாக பயன்படுத்தகின்றது. இதனால் பணவீக்கமும் கட்டுக்குள் வருகின்றது.

வட்டிவிகிதம் அதிகமாக இருக்கும் சமயத்தில் மக்களிடம் கடன் வாங்குவது  அதிக வட்டி சுமையே ஏற்படுத்துவதாகவும்  சேமிப்பு திட்டகள் கவர்ச்சிகரமான ஒன்றாகவும் இருக்கும்.இதனால் மக்களிடம் சேமிப்பு அதிகரித்து பணபுழக்கம் குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்.


வட்டிவிகிதம் குறைவாக இருக்கும் சமயங்களில் மக்களிடம் பணபுழக்கத்தை அதிகரிக்க வங்கிகள் அதிக அளவில் கடன் அளித்து பணபுழக்கத்தை அதிகரிக்க செய்கின்றன.


அரசும் மற்றும் மத்திய வங்கிகளும் வட்டிவிகிதத்தின் முலம்   பணப்புழக்கத்தை கட்டுபடுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன.பணப்புழக்கம்  கட்டுபடுத்துவதன் பணவீக்கமும் கட்டுக்குள் கொண்டு வரபடும். 


நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும் 





No comments:

Post a Comment