2012ம் ஆண்டில், நாட்டின் கமாடிட்டி முன்பேர சந்தைகளில், தொழில் துறை சார்ந்த உலோகங்களை காட்டிலும் வேளாண் பொருட்கள் முதலீட்டாளர்களுக்கு வருவாயை வாரி வழங்கியுள்ளன.கடந்த 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், தொழில் துறை சார்ந்த அலுமினியம், தாமிரம் போன்ற பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தது. இதனால், இவற்றின் விலையும் மிகப் பெரிய அளவில் அதிகரிக்காமல் இருந்தது.
தென்அமெரிக்கநாடுகளின் வறட்சி :
வேளாண் பொருட்கள் அதிக விளையும் பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் நிலவிய வறட்சியால், சர்வதேச சந்தையில் வேளாண் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது.இதனால் சர்வதேச சந்தையில் வேளாண் பொருட்கள் விலை உயர்ந்து நாட்டின் கமாடிட்டி முன்பேர வர்த்தக சந்தைகளில், தொழில் துறை சார்ந்த பொருட்களை விட, வேளாண் பொருட்களின் விலை கிடு கிடு வென, உயர்ந்தது.
குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
மத்திய அரசும் முக்கிய வேளாண் பொருட்களுக்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை 30 சதவீதம் வரை உயர்த்தியது.
இத்தகைய நடவடிக்கைகளால், சென்ற ஆண்டு, கமாடிட்டிமுன்பேர சந்தையில் வேளாண் பொருட்கள் மீது முதலீடு செய்தவர்களுக்கு சிறப்பான வருவாய் கிடைத்துஉள்ளது.
ஏலக்காய்
2012 -ல் ஏலக்காய் தான் வேளாண் பொருட்களில் அதிகபடியான வருவாய் ஆன 70% ஈட்டியுள்ளது .ஏலக்காய் உலகில் அதிகமாக உற்பத்தியாகும் கவுதமாலா நாட்டின் உற்பத்தி குறைவே ஏலக்காய் விலையேற்றத்திற்கு காரணம் ஆகும்.சாதகமற்ற பருவ நிலையால், கேரளாவில், ஏலக்காய் உற்பத்தி வெகுவாக சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012 -ல் கமாடிட்டி முன்பேர சந்தையில் வேளாண் பொருட்கள்
கச்சா எண்ணெய்: தொழில் துறை சார்ந்த பொருட்களின் விலை, மிகச் சிறிய அளவிலேயே உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 5% குறைந்து உள்ளது.ஒரு கிலோ தாமிரத்தின் விலை, 9 சதவீதம் அதிகரித்து, 406 ரூபாயிலிருந்து, 443 ரூபாய் என்ற அளவில், குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது.அதே சமயம், ஒரு குவிண்டால் ரப்பர் விலை, 16.77 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 19,875 ரூபாயிலிருந்து, 16,541 ரூபாயாக குறைந்துள்ளது.
கரீப் பருவத்தில், குறைவான மற்றும் தாமதமான மழைப் பொழிவால், நாட்டின் வேளாண் பொருட்கள் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.
சாகுபடி:எனினும், ஒட்டுமொத்த அளவில், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும், தற்போதைய சூழலில், பல வேளாண் பொருட்களின் உற்பத்தி மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், நடப்பு ரபி பருவத்தில், பெரும்பாலான தானியங்களின் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால், வரும் செப்டம்பர் வரை வேளாண் பொருட்களின் விலை, ஓரளவிற்கு நிலையாகவே இருக்கும் என, தெரிகிறது.
Related Articles :
No comments:
Post a Comment