Friday, 4 January 2013

போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட்


முதலீட்டில், போர்ட்ஃபோலியோ என்பது  பலவிதமான முதலீட்டு உபகரணங்களை உள்ளடக்கிய ஒரு முதலீட்டு  கலவை ஆகும். பொதுவாக முதலீட்டு போர்ட்ஃபோலிகளில் பங்குகளில் முதலீடு,ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி,பங்கு சார்ந்த முதலீடு, கடன் பத்திரங்கள்,டெபாசிட்டுகள் என பலவிதமான முதலீடுகள் அடங்கியது ஆகும்.இந்த போர்ட்போலியோகள் ஒவ்வொருக்கும் அவரவர் முதலீட்டின் படி மாறுபடும்.ஒரு சிறந்த / பாதுகாப்பான முதலீட்டி ற்கு  போர்ட்ஃபோலியோவில் உள்ள  அனைத்து முதலீட்டு உபகரணங்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.இதுவே நிதி திட்டமிடலின் முக்கிய  நோக்கம்.நிதி திட்டமிடல்(Financial Planning) கொள்கைகளின் படி போர்ட்ஃபோலியோவில் உள்ள முதலீட்டு உபகரணங்கள் அவரவர் வயதிற்கேற்ற சதவிகிதத்தில் சரியான விகிதத்தில் இருப்பதே சிறந்த போர்ட்ஃபோலியோ  மேனேஜ்மென்ட் ஆகும்.


முதலீடுகள்  வளர ஒவ்வொருவருக்கும்  ஒரு முறையான போர்ட்ஃபோலியோ அணுகுமுறை தேவை.அதற்கு தேவைகளுக்கு ஏற்பமுதலீடு அமைய வேண்டும். 
ஒருவருடைய வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம், வீடு, ஓய்வுகால வாழ்க்கை, தருமம் போன்றவற்றிற்காக சேமிப்பதை முறையாக ஒரு போர்ட்ஃபோலியோ வரையறைக்குள் சேமிக்க /முதலீடு செய்ய  வேண்டும்.
தேவைகள்
முதலீட்டு வகை (தேவை மற்றும் கால அளவைப் பொறுத்து கீழ்க்கண்ட முதலீடுகளை வகைப்படுத்தலாம் 
குறுகிய காலத் தேவைகள் (மூன்று வருடத்திற்குள்)
சேவிங்ஸ் கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட், ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட்.
நடுத்தர காலத் தேவைகள் (4 – 7 வருடங்கள்)
எம்.ஐ.பி., பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள், பாண்டுஃபண்டுகள், இ.டி.எஃப், லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் லார்ஜ்கேப் பங்குகள். தங்கம்/வெள்ளி.
நீண்ட காலத் தேவைகள் (ஏழு வருடங்களுக்கு மேல்)
லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்/பங்குகள், இ.டி.எஃப்., ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி, சொந்தத் தொழில் அல்லது தொழில் சார்ந்த முதலீடுகள், ஆர்ட் மற்றும் கலெக்டர்ஸ் அயிட்டங்கள்.

No comments:

Post a Comment