Showing posts with label போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட். Show all posts
Showing posts with label போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட். Show all posts

Friday, 4 January 2013

போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் -அணுகுமுறை

முதலீடுகள்  வளர ஒவ்வொருவருக்கும்  ஒரு முறையான போர்ட்ஃபோலியோ அணுகுமுறை தேவை.அவரவர்களின் வயதிற்கேற்றமுதலீட்டு போர்ட்ஃபோலியோவை அமைத்து  கொள்வதே சிறந்த வழி  ஆகும்.இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள்நான்கு:
1. பங்கு சார்ந்த முதலீடுகள்.
2. கடன் சார்ந்தமுதலீடுகள்.
3. ரியல் எஸ்டேட்.
4. தங்கம்/வெள்ளி

போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட்


முதலீட்டில், போர்ட்ஃபோலியோ என்பது  பலவிதமான முதலீட்டு உபகரணங்களை உள்ளடக்கிய ஒரு முதலீட்டு  கலவை ஆகும். பொதுவாக முதலீட்டு போர்ட்ஃபோலிகளில் பங்குகளில் முதலீடு,ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி,பங்கு சார்ந்த முதலீடு, கடன் பத்திரங்கள்,டெபாசிட்டுகள் என பலவிதமான முதலீடுகள் அடங்கியது ஆகும்.இந்த போர்ட்போலியோகள் ஒவ்வொருக்கும் அவரவர் முதலீட்டின் படி மாறுபடும்.ஒரு சிறந்த / பாதுகாப்பான முதலீட்டி ற்கு  போர்ட்ஃபோலியோவில் உள்ள  அனைத்து முதலீட்டு உபகரணங்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.இதுவே நிதி திட்டமிடலின் முக்கிய  நோக்கம்.நிதி திட்டமிடல்(Financial Planning) கொள்கைகளின் படி போர்ட்ஃபோலியோவில் உள்ள முதலீட்டு உபகரணங்கள் அவரவர் வயதிற்கேற்ற சதவிகிதத்தில் சரியான விகிதத்தில் இருப்பதே சிறந்த போர்ட்ஃபோலியோ  மேனேஜ்மென்ட் ஆகும்.