2012ம் ஆண்டில், நாட்டின் கமாடிட்டி முன்பேர சந்தைகளில், தொழில் துறை சார்ந்த உலோகங்களை காட்டிலும் வேளாண் பொருட்கள் முதலீட்டாளர்களுக்கு வருவாயை வாரி வழங்கியுள்ளன.கடந்த 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், தொழில் துறை சார்ந்த அலுமினியம், தாமிரம் போன்ற பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தது. இதனால், இவற்றின் விலையும் மிகப் பெரிய அளவில் அதிகரிக்காமல் இருந்தது.
Showing posts with label கமாடிட்டி. Show all posts
Showing posts with label கமாடிட்டி. Show all posts
Saturday, 5 January 2013
கமாடிட்டி முன்பேர வர்த்தக சந்தையில் 2012 -ல் அதிக வருவாயை வழங்கிய வேளாண் பொருட்கள்
2012ம் ஆண்டில், நாட்டின் கமாடிட்டி முன்பேர சந்தைகளில், தொழில் துறை சார்ந்த உலோகங்களை காட்டிலும் வேளாண் பொருட்கள் முதலீட்டாளர்களுக்கு வருவாயை வாரி வழங்கியுள்ளன.கடந்த 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், தொழில் துறை சார்ந்த அலுமினியம், தாமிரம் போன்ற பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தது. இதனால், இவற்றின் விலையும் மிகப் பெரிய அளவில் அதிகரிக்காமல் இருந்தது.
Labels:
கமாடிட்டி,
சந்தை நிலவரம்,
தங்கம்,
பண்டக சந்தை,
முன்பேர வர்த்தகம்
Friday, 4 January 2013
போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் -அணுகுமுறை
முதலீடுகள் வளர ஒவ்வொருவருக்கும் ஒரு முறையான போர்ட்ஃபோலியோ அணுகுமுறை தேவை.அவரவர்களின் வயதிற்கேற்றமுதலீட்டு போர்ட்ஃபோலியோவை அமைத்து கொள்வதே சிறந்த வழி ஆகும்.இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள்நான்கு:
1. பங்கு சார்ந்த முதலீடுகள்.
2. கடன் சார்ந்தமுதலீடுகள்.
3. ரியல் எஸ்டேட்.
4. தங்கம்/வெள்ளி
போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட்
முதலீட்டில், போர்ட்ஃபோலியோ என்பது பலவிதமான முதலீட்டு உபகரணங்களை உள்ளடக்கிய ஒரு முதலீட்டு கலவை ஆகும். பொதுவாக முதலீட்டு போர்ட்ஃபோலிகளில் பங்குகளில் முதலீடு,ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி,பங்கு சார்ந்த முதலீடு, கடன் பத்திரங்கள்,டெபாசிட்டுகள் என பலவிதமான முதலீடுகள் அடங்கியது ஆகும்.இந்த போர்ட்போலியோகள் ஒவ்வொருக்கும் அவரவர் முதலீட்டின் படி மாறுபடும்.ஒரு சிறந்த / பாதுகாப்பான முதலீட்டி ற்கு போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து முதலீட்டு உபகரணங்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.இதுவே நிதி திட்டமிடலின் முக்கிய நோக்கம்.நிதி திட்டமிடல்(Financial Planning) கொள்கைகளின் படி போர்ட்ஃபோலியோவில் உள்ள முதலீட்டு உபகரணங்கள் அவரவர் வயதிற்கேற்ற சதவிகிதத்தில் சரியான விகிதத்தில் இருப்பதே சிறந்த போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் ஆகும்.
Labels:
கமாடிட்டி,
சந்தை நிலவரம்,
தங்கம்,
போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட்
Thursday, 3 January 2013
கோல்ட் ETF களில் முதலீட்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.12000 கோடியை நெருங்குகிறது
பரஸ்பர நிதிகளின் கூட்டணி அமைப்பு AMFI(Association of Mutual Funds of India) நவம்பர் 30 தேதி வரை மியுச்சுவல் பண்ட் களில் முதலீடு செய்யபட்டுள்ள முதலீட்டின் சொத்து மதிப்பை வெளிட்டுள்ளது.
அதன் படி கோல்ட் ETF களில் நவம்பர் 30 தேதி வரை செய்யபட்டுள்ள முதலீடுகளின் நிகர சொத்து மதிப்பு ரூ.11,918 கோடி மதிப்பீடு செய்துள்ளது. இந்த அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு காரணம் தங்கத்தின் விலை ஏற்றமும்,முதலீட்டாளர்களின் தொடரும் முதலீட்டின் தேவை அதிகரிப்புமே ஆகும்.
அதன் படி கோல்ட் ETF களில் நவம்பர் 30 தேதி வரை செய்யபட்டுள்ள முதலீடுகளின் நிகர சொத்து மதிப்பு ரூ.11,918 கோடி மதிப்பீடு செய்துள்ளது. இந்த அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு காரணம் தங்கத்தின் விலை ஏற்றமும்,முதலீட்டாளர்களின் தொடரும் முதலீட்டின் தேவை அதிகரிப்புமே ஆகும்.
Labels:
கமாடிட்டி,
சந்தை நிலவரம்,
தங்கம்,
பங்கு வர்த்தகம்,
பரஸ்பர நிதி
Sunday, 27 November 2011
கமாடிட்டி(பண்டக)சந்தையில் வர்த்தகம் செய்யும் வழிமுறைகள்
பண்டக சந்தை என்பது பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய வர்த்தகசந்தை ஆகும் .பண்டக சந்தையில் முன்பேர வர்த்தகம் என்ற அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுவதால் பொருட்களை வாங்கவும்/விற்கவும் முடியும்.பொருட்கள் விலை ஏறும் பட்சத்தில் வாங்கவும்,விலை இறங்கும் பட்சத்தில் விற்கலாம்.
பண்டக வர்த்தகம் செய்ய இரு பகுப்பாய்வுகளை செய்ய வேண்டும்.
- அடிப்படைக்கூறு பகுப்பாய்வு(Fundamental analysis)
- தொழில்நுட்பகூறு பகுப்பாய்வு(Technical analysis)
அடிப்படைக்கூறு பகுப்பாய்வு(Fundamental analysis)
அடிப்படைக்கூறு பகுப்பாய்வு என்பது எந்த பொருளை வர்த்தகம் செய்வது என்பதை ஆய்வு செய்யும்.
பொருட்கள் விலை நிர்ணயம் செய்யும் காரணிகள்
தேவை மற்றும் அளிப்பு,
உலக அரசியல் &பொருளாதார சுழ்நிலை
உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் இயற்கை சிற்றங்கள்
இந்த காரணிகளை பற்றிய செய்திகளை ஆய்வு செய்வதை அடிப்படைக்கூறு பகுப்பாய்வின் முக்கிய பங்கு ஆகும். காரணிகளின் செய்திகளே விலை ஏற்ற/இறக்கத்தை நிர்ணயம் செய்கின்றது.
தொழில்நுட்பகூறு பகுப்பாய்வு(Technical analysis)
அடிப்படைக்கூறு பகுப்பாய்வின் முலம் வர்த்தகம் செய்யும் பொருளை தேர்வு செய்த பின் எந்த விலையில் வாங்க/விற்க வேண்டும் என்பதை ஆய்வு செய்யும்.
பொருட்களின் முந்தைய விலை விவரக் குறிப்புகளை வரைபடம்(chart) முலம் ஆராயிந்து பொருளின் தாங்கு நிலை(Support ) மற்றும் தடைய நிலை(Resistance) அறிய முடியும்.
நான்கு விலைகள்:
எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும், ஒரு வர்த்தக நாளில், அதற்கு ஒரு தொடக்கவிலை (Open Price), அதிகபட்ச விலை ( High Price), குறைந்தபட்ச விலை (Low Price), முடிவு விலை (Close Price) என நான்கு விலை நிலவரங்கள் இருக்கும்.
தொடக்க விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் (நாள், வாரம், மாதம், ஆண்டு) நடக்கும் வர்த்தகத்தின் ‘தொடக்க விலை’யை இது குறிக்கும்.
அதிகபட்ச விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் ’உச்சபட்சவிலை’யை இது குறிக்கும்.
ஒரு பொருளின் மீது இந்த நேரத்தில், சந்தையில் விற்பவர்களை விட வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதேயே சற்று மாற்றி சொல்வது என்றால், விற்பவர்கள் அதிக விலைக்கு விற்க விரும்புவதாக இருந்திருப்பார்கள். அதே நேரத்தில், வாங்குபவர்களும் அதிக விலை கொடுத்து வாங்க விரும்பமாக இருந்திருப்பார்கள்.
குறைந்தபட்ச விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் குறைந்த விலையை இது குறிப்பிடும். இந்தக் கால கட்டத்தில், வாங்குபவர்களை விட விற்பவர்களின் எண்ணிக்கை சந்தையில் அதிகமாக இருக்கும். இதேயே சற்று மாற்றி சொல்வது என்றால், வாங்குபவர்கள் குறைந்த விலைக்கு வாங்க விரும்புவார்கள். அதே நேரத்தில், விற்பவர்களும் குறைந்த விலைக்கு விற்க தயாராக இருந்திருப்பார்கள்.
முடிவு விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் நிறைவு விலை’யே முடிவு விலை எனப்படும.இந்த முடிவு விலைதான் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆரம்ப விலைக்கும், முடிவு விலைக்கும் இடையிலான விலை மாற்றம் பெரும்பாலான தொழில்நுட்ப பகுப்பாய்வாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு அலசப்படுகிறது.
ஒரு நாள் வர்த்தகதில் அதிகபட்ச விலை & குறைந்தபட்ச விலை மட்டுமே மாறும்.
தொடக்க விலை & முடிவு விலை மாறாது.
Labels:
கமாடிட்டி,
சந்தை நிலவரம்,
தங்கம்,
பங்கு,
பண்டக சந்தை,
முன்பேர வர்த்தகம்
Monday, 14 November 2011
கமாடிட்டி முன்பேர வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்யும் காரணிகள்
காரணிகள்
தங்கம், வெள்ளி,தாமிரம் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றின் மீதான கமாடிட்டி முன்பேர வர்த்தகம் என்பது, சர்வதேச சந்தைகளில் நிலவும், தேவை மற்றும் அளிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சார்ந்து உள்ளது.
அதேசமயம், வேளாண் விளை பொருள்கள் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகம் என்பது, பெரும்பாலும் உள்நாட்டு சந்தைகளில் நிலவும், தேவை, உற்பத்தி மற்றும் அளிப்பு போன்றவற்றை சார்ந்து உள்ளது.
நம்நாட்டில், பல்வேறு வேளாண் விளைபொருள்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், போதிய அளவிற்கு விளைச்சல் இன்றி, தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அளிப்பு இல்லாத நிலையில், வேளாண் விளைபொருள்கள் மீது, முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள அரசு தடை விதித்து விடும்.
இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2008ம் ஆண்டில், பல அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால், நாட்டின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. இதனால், கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, ரப்பர், சோயா எண்ணெய் போன்ற வேளாண் விளைபொருள்கள் மீது, முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசு தடை விதித்தது.
முன்பேர வர்த்தகம், ஊக வணிகம் என்று கருதப்பட்டாலும், இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும் விளைபொருள்களின் விலை, ஒரு சில தினங்களில் பன் மடங்காக அதிகரிக்க வாய்ப்பில்லை. அப்படியே விலை உயரும் பட்சத்தில், முன்பேர வர்த்தக சந்தைகள் அதை உடனடியாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து விடும். ஏனெனில், இதனால் இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, புரோக்கர்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் இது ஸ்தம்பிக்க வைத்து விடும். இதனால், பணப்பட்டுவாடா பிரச்னைகளும் ஏற்படும். எனவே, முன்பேர வர்த்தக சந்தைகளும், இச்சந்தைகளுக்கான கட்டுப்பாட்டு அமைப்பான 'பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷனும்' (எப்.எம்.சி.) இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விளைபொருள்கள் மீது அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
தங்கம்&வெள்ளி
உலக அரசியல் &பொருளாதார சுழ்நிலை
தேவை மற்றும் அளிப்பு
அமெரிக்க டாலர் மதிப்பு
உலோகங்கள் :
தேவை மற்றும் அளிப்பு
உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் இயற்கை சிற்றங்கள்
உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு
பொருளாதார சுழ்நிலை
Labels:
கமாடிட்டி,
சந்தை நிலவரம்,
தங்கம்,
பங்கு பண்டக சந்தை,
முன்பேர வர்த்தகம்
Sunday, 13 November 2011
பண்டகசந்தை (கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்)& பண்டக முன்பேர வர்த்தக சந்தை (கமாடிட்டி பியூச்சர்ஸ் மார்க்கெட்)
நோக்கம்:
பண்டக சந்தை மற்றும் பண்டகமுன்பேர வர்த்தக சந்தை என்பது, வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி உருவாக்கப்பட்டது.
விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், நுகர்வோருக்கும் அதிக சுமை ஏற்படுத்தாத வகையில், பொருள்களை அளித்து, இரு தரப்பினருக்கும் இடையில் பாலம் போல் செயல்படுவதே கமாடிட்டி சந்தையின் முக்கிய நோக்கம்.
தொடக்கம்
உலகளவில், முதன்முதலாக, 1848ம் ஆண்டில், சிகாகோவில் ஒரு சில வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து, 'சிகாகோ போர்டு ஆப் டிரேடு' (சி.பீ.ஒ.டி.,) என்ற பெயரில், பண்டக சந்தையை உருவாக்கினர்.
சி.பீ.ஒ.டி., சந்தை உருவாக்கப்படுவதற்கு முன்பாக, அந்த நகரத்தை சுற்றியிருந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த தானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை சிகாகோ சந்தைக்கு எடுத்து வந்தனர். தாங்கள் கஷ்டப்பட்டு எடுத்து வரும் பொருள்களை வாங்குவதற்கு, பல நேரங்களில் வாங்குவோர் இல்லாததால், மிகுந்த இடர்பாட்டுக்கு ஆளாகினர். குறிப்பாக, போக்குவரத்திற்காக அதிகளவில் செலவிட்டு கொண்டு வரும் பொருள்களுக்கு, உரிய விலை கிடைக்காத நிலை ஒருபுறம் இருக்க, வாங்குபவர்கள் இல்லாத நிலை ஏற்படும் போது, விவசாயிகள் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. பல விவசாயிகள் மிக, மிக குறைந்த விலைக்கு பொருள்களை விற்பனை செய்தனர். மேலம், சில விவசாயிகள் தானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை வாங்குவதற்கு ஆள் இல்லாததால், அவற்றை அருகிலிருந்த ஏரியில் கொட்டி விட்டு, ஊர் திரும்பும் நிலை இருந்தது.
விவசாயிகள் படும் கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் கண்ட மனிதாபிமானம் கொண்ட வர்த்தகர்களால் உருவாக்கப்பட்ட சந்தை தான் இந்த, 'சிகாகோ போர்ட் ஆப் டிரேடு.' தற்போது விளைபொருள் மட்டுமல்லாமல் உலோகங்களும் வர்த்தகம் ஆகிறது.
தற்போது, உலகம் முழுவதிலுமாக, 100க்கும் மேற்பட்ட, அமைப்பு ரீதியான சந்தைகளும், பண்டக முன்பேர வர்த்தக சந்தைகளும் உள்ளன.
உலகில் உள்ள முக்கிய பண்டகசந்தைகள்
சிகாகோ போர்ட் ஆப் டிரேடு
கமாடிட்டி எக்ஸ்சேஞ்
லண்டன் மெடல் எக்ஸ்சேஞ்
இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு முன்பேர வர்த்தகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
முன்பேர வர்த்தகம் மற்றும் சந்தைகள் போர்வர்ட் மார்க்கெட்ஸ் கமிஷன்(FMC) என்ற அரசு ஆணையம் முலம் கண்காணிக்கபடுகிறது.
இந்தியாவில் உள்ள முக்கிய பண்டகசந்தைகள்:
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் (MCX)
நேஷனல் கமாடிட்டீஸ் அண்டு டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ் (NCDEX)
நேஷனல் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் ஆப் இந்தியா (NMCE)
வர்த்தகம் ஆகும் பொருள்கள்/பண்டங்கள்
தங்கம்
வெள்ளி
தாமிரம்
கட்சாஎண்ணெய்
பித்தளை
காரியம்
அலுமினியம்
இயற்கை எரிவாயு
ஏலக்காய்
மிளகு
மஞ்சள்
மிளகாய்
சோயா எண்ணெய்
சோயாபீன்
பருத்தி
Labels:
கமாடிட்டி,
சந்தை நிலவரம்,
தங்கம்,
பங்கு வர்த்தகம்,
பண்டக சந்தை,
முன்பேர வர்த்தகம்
Subscribe to:
Posts (Atom)