Showing posts with label பங்கு வர்த்தகம். Show all posts
Showing posts with label பங்கு வர்த்தகம். Show all posts

Thursday, 3 January 2013

கோல்ட் ETF களில் முதலீட்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.12000 கோடியை நெருங்குகிறது

பரஸ்பர நிதிகளின் கூட்டணி அமைப்பு AMFI(Association of Mutual Funds of  India) நவம்பர் 30 தேதி வரை மியுச்சுவல் பண்ட் களில் முதலீடு செய்யபட்டுள்ள முதலீட்டின் சொத்து மதிப்பை வெளிட்டுள்ளது.

 அதன் படி கோல்ட்  ETF களில் நவம்பர் 30 தேதி வரை செய்யபட்டுள்ள முதலீடுகளின் நிகர சொத்து மதிப்பு ரூ.11,918 கோடி மதிப்பீடு செய்துள்ளது. இந்த  அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு காரணம் தங்கத்தின் விலை ஏற்றமும்,முதலீட்டாளர்களின் தொடரும் முதலீட்டின் தேவை அதிகரிப்புமே ஆகும்.

Sunday, 13 November 2011

பண்டகசந்தை (கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்)& பண்டக முன்பேர வர்த்தக சந்தை (கமாடிட்டி பியூச்சர்ஸ் மார்க்கெட்)



நோக்கம்:


பண்டக சந்தை மற்றும் பண்டகமுன்பேர வர்த்தக சந்தை என்பது, வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி உருவாக்கப்பட்டது. 


விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், நுகர்வோருக்கும் அதிக சுமை ஏற்படுத்தாத வகையில், பொருள்களை அளித்து, இரு தரப்பினருக்கும் இடையில் பாலம் போல் செயல்படுவதே கமாடிட்டி சந்தையின் முக்கிய நோக்கம்.


தொடக்கம்


உலகளவில், முதன்முதலாக, 1848ம் ஆண்டில், சிகாகோவில் ஒரு சில வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து, 'சிகாகோ போர்டு ஆப் டிரேடு' (சி.பீ.ஒ.டி.,) என்ற பெயரில், பண்டக சந்தையை உருவாக்கினர்.
சி.பீ.ஒ.டி., சந்தை உருவாக்கப்படுவதற்கு முன்பாக, அந்த நகரத்தை சுற்றியிருந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த தானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை சிகாகோ சந்தைக்கு எடுத்து வந்தனர். தாங்கள் கஷ்டப்பட்டு எடுத்து வரும் பொருள்களை வாங்குவதற்கு, பல நேரங்களில் வாங்குவோர் இல்லாததால், மிகுந்த இடர்பாட்டுக்கு ஆளாகினர். குறிப்பாக, போக்குவரத்திற்காக அதிகளவில் செலவிட்டு கொண்டு வரும் பொருள்களுக்கு, உரிய விலை கிடைக்காத நிலை ஒருபுறம் இருக்க, வாங்குபவர்கள் இல்லாத நிலை ஏற்படும் போது, விவசாயிகள் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. பல விவசாயிகள் மிக, மிக குறைந்த விலைக்கு பொருள்களை விற்பனை செய்தனர். மேலம், சில விவசாயிகள் தானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை வாங்குவதற்கு ஆள் இல்லாததால், அவற்றை அருகிலிருந்த ஏரியில் கொட்டி விட்டு, ஊர் திரும்பும் நிலை இருந்தது. 
விவசாயிகள் படும் கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் கண்ட மனிதாபிமானம் கொண்ட வர்த்தகர்களால் உருவாக்கப்பட்ட சந்தை தான் இந்த, 'சிகாகோ போர்ட் ஆப் டிரேடு.' தற்போது விளைபொருள் மட்டுமல்லாமல் உலோகங்களும் வர்த்தகம் ஆகிறது.


தற்போது, உலகம் முழுவதிலுமாக, 100க்கும் மேற்பட்ட, அமைப்பு ரீதியான சந்தைகளும், பண்டக முன்பேர வர்த்தக சந்தைகளும் உள்ளன.




உலகில் உள்ள முக்கிய பண்டகசந்தைகள் 


சிகாகோ போர்ட் ஆப் டிரேடு
கமாடிட்டி எக்ஸ்சேஞ் 
லண்டன் மெடல் எக்ஸ்சேஞ்  


இந்தியாவில் அறிமுகம்


இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு முன்பேர வர்த்தகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.


முன்பேர வர்த்தகம் மற்றும் சந்தைகள் போர்வர்ட் மார்க்கெட்ஸ் கமிஷன்(FMC) என்ற அரசு ஆணையம் முலம் கண்காணிக்கபடுகிறது.


இந்தியாவில் உள்ள முக்கிய பண்டகசந்தைகள்:


மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் (MCX)  


நேஷனல் கமாடிட்டீஸ் அண்டு டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ் (NCDEX)


நேஷனல் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் ஆப் இந்தியா (NMCE) 


வர்த்தகம் ஆகும் பொருள்கள்/பண்டங்கள் 


தங்கம்
வெள்ளி
தாமிரம்
கட்சாஎண்ணெய்
பித்தளை
காரியம்
அலுமினியம்
இயற்கை எரிவாயு


ஏலக்காய்
மிளகு
மஞ்சள்
மிளகாய்
சோயா எண்ணெய்
சோயாபீன்
பருத்தி