பண்டக சந்தை என்பது பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய வர்த்தகசந்தை ஆகும் .பண்டக சந்தையில் முன்பேர வர்த்தகம் என்ற அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுவதால் பொருட்களை வாங்கவும்/விற்கவும் முடியும்.பொருட்கள் விலை ஏறும் பட்சத்தில் வாங்கவும்,விலை இறங்கும் பட்சத்தில் விற்கலாம்.
பண்டக வர்த்தகம் செய்ய இரு பகுப்பாய்வுகளை செய்ய வேண்டும்.
- அடிப்படைக்கூறு பகுப்பாய்வு(Fundamental analysis)
- தொழில்நுட்பகூறு பகுப்பாய்வு(Technical analysis)
அடிப்படைக்கூறு பகுப்பாய்வு(Fundamental analysis)
அடிப்படைக்கூறு பகுப்பாய்வு என்பது எந்த பொருளை வர்த்தகம் செய்வது என்பதை ஆய்வு செய்யும்.
பொருட்கள் விலை நிர்ணயம் செய்யும் காரணிகள்
தேவை மற்றும் அளிப்பு,
உலக அரசியல் &பொருளாதார சுழ்நிலை
உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் இயற்கை சிற்றங்கள்
இந்த காரணிகளை பற்றிய செய்திகளை ஆய்வு செய்வதை அடிப்படைக்கூறு பகுப்பாய்வின் முக்கிய பங்கு ஆகும். காரணிகளின் செய்திகளே விலை ஏற்ற/இறக்கத்தை நிர்ணயம் செய்கின்றது.
தொழில்நுட்பகூறு பகுப்பாய்வு(Technical analysis)
அடிப்படைக்கூறு பகுப்பாய்வின் முலம் வர்த்தகம் செய்யும் பொருளை தேர்வு செய்த பின் எந்த விலையில் வாங்க/விற்க வேண்டும் என்பதை ஆய்வு செய்யும்.
பொருட்களின் முந்தைய விலை விவரக் குறிப்புகளை வரைபடம்(chart) முலம் ஆராயிந்து பொருளின் தாங்கு நிலை(Support ) மற்றும் தடைய நிலை(Resistance) அறிய முடியும்.
நான்கு விலைகள்:
எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும், ஒரு வர்த்தக நாளில், அதற்கு ஒரு தொடக்கவிலை (Open Price), அதிகபட்ச விலை ( High Price), குறைந்தபட்ச விலை (Low Price), முடிவு விலை (Close Price) என நான்கு விலை நிலவரங்கள் இருக்கும்.
தொடக்க விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் (நாள், வாரம், மாதம், ஆண்டு) நடக்கும் வர்த்தகத்தின் ‘தொடக்க விலை’யை இது குறிக்கும்.
அதிகபட்ச விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் ’உச்சபட்சவிலை’யை இது குறிக்கும்.
ஒரு பொருளின் மீது இந்த நேரத்தில், சந்தையில் விற்பவர்களை விட வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதேயே சற்று மாற்றி சொல்வது என்றால், விற்பவர்கள் அதிக விலைக்கு விற்க விரும்புவதாக இருந்திருப்பார்கள். அதே நேரத்தில், வாங்குபவர்களும் அதிக விலை கொடுத்து வாங்க விரும்பமாக இருந்திருப்பார்கள்.
குறைந்தபட்ச விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் குறைந்த விலையை இது குறிப்பிடும். இந்தக் கால கட்டத்தில், வாங்குபவர்களை விட விற்பவர்களின் எண்ணிக்கை சந்தையில் அதிகமாக இருக்கும். இதேயே சற்று மாற்றி சொல்வது என்றால், வாங்குபவர்கள் குறைந்த விலைக்கு வாங்க விரும்புவார்கள். அதே நேரத்தில், விற்பவர்களும் குறைந்த விலைக்கு விற்க தயாராக இருந்திருப்பார்கள்.
முடிவு விலை:
ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் வர்த்தகத்தின் நிறைவு விலை’யே முடிவு விலை எனப்படும.இந்த முடிவு விலைதான் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆரம்ப விலைக்கும், முடிவு விலைக்கும் இடையிலான விலை மாற்றம் பெரும்பாலான தொழில்நுட்ப பகுப்பாய்வாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு அலசப்படுகிறது.
ஒரு நாள் வர்த்தகதில் அதிகபட்ச விலை & குறைந்தபட்ச விலை மட்டுமே மாறும்.
தொடக்க விலை & முடிவு விலை மாறாது.
No comments:
Post a Comment