ஈரானில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 102.81 டாலராக விற்பனையாகிறது. புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச சந்தைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது. செவ்வாய்க்கிழமை நியூயார்க் சந்தையில் முன்பேர வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110.08 டாலராக உயர்ந்தது. திங்கள்கிழமை ஈரான் தரையிலிருந்து தரை இலக்கைத் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது. கடற்படை ஒத்திகையின் ஒரு அங்கமாக இது நிகழ்த்தப்பட்டபோதிலும், மற்ற நாடுகளிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. மேலும் கடற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை தடுத்து நிறுத்தப் போவதாக ஈரான் சமீபத்தில் அறிவித்ததால், கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்தது.
No comments:
Post a Comment