Sunday, 15 April 2012

நாட்டின் முன்பேர சந்தைகளில் வர்த்தகம் ரூ.181 லட்சம் கோடி


நாட்டில் உள்ள, 21 முன்பேர சந்தைகளில், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 181.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 52% (119.48 லட்சம் கோடி ரூபாய்) அதிகம் என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) வெளியிட்டு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பேர சந்தையின் மொத்த வியாபாரத்தில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம், இதே நிதியாண்டுகளில், 85% அதிகரித்து, 54.93 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 101.81 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கொண்டை கடலை, கொத்தவரை, புதினா உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 51% உயர்ந்து, 14.56 லட்சம் கோடியிலிருந்து, 21.96 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சிகண்டுள்ளது. உலோகங்கள் மீதான வர்த்தகம், 8% வளர்ச்சிகண்டு, 26.87 லட்சம் கோடியிலிருந்து, 28.96 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிசக்தி மீதான வர்த்தகம், 23% அதிகரித்து, 23.10 லட்சம் கோடியிலிருந்து, 28.51 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, எப்.எம்.சி. அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
Source:indiafinancebazaar

No comments:

Post a Comment